என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    எம்.எஸ். தோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?- சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்
    X

    எம்.எஸ். தோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?- சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

    • எம்.எஸ். தோனியின் குடும்பம் ஆட்டத்தை பார்த்து வருகின்றனர்.
    • முதன்முறையாக சேப்பாக்கத்திற்கு தோனியின் பெற்றோர் வருகை தந்துள்ளது ரசிகர்களிடம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண எம்.எஸ். தோனியும் குடும்பம் வருகை தந்துள்ளது.

    எம்.எஸ். தோனியின் பெற்றோர் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். அதேபோல் அவரது மனைவி மற்றும் மகளும் போட்டியை ரசித்து வருகின்றனர்.

    எம்.எஸ். தோனியால் முந்தைய காலங்களை போன்று சிறப்பாக விளையாட முடியவில்லை என்ற விமர்சனம் சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே டோனியால் 10 ஓவர்கள் நிலைத்து நின்று விளையாட முடியாது என சிஎஸ்கே ஆலோசகர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இதுவரை, அதாவது (2008) ஐபிஎல் தொடங்கியதில் இருந்து எம்.எஸ். தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது. இன்றைய டெல்லியை பார்க்க வந்துள்ளனர். இதனால் எம்.எஸ். தோனி ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என சமூக வலைத்தங்களில் தகவல் தீயாக பரவி வருகிறது.

    இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை சிஎஸ்கே இழந்த நிலையில், எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய களம் இறங்கியுள்ளார்.

    Next Story
    ×