என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பாக்சிங் டே டெஸ்ட் போட்டி.. புதிய லுக்கில் விராட் கோலி - வீடியோ வைரல்
- கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் துவங்கும் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என அழைப்பர்.
- 4-வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட்டில் இந்தியாவும் 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையினால் டிரா ஆனது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் உள்ளது. இதனையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி மெர்ல்போனில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டி பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது. பொதுவாகவே, டிசம்பர் 26-ம் தேதி துவங்கும் டெஸ்ட்களை பாக்சிங் டே டெஸ்ட் என அழைப்பார்கள்.
கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் துவங்கும் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என ஒவ்வொரு ஆண்டும் விளையாடப்படுகிறது. இதனால் 4-வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.
இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி புதிய லுக்கில் இருக்கும் விடியோவை ஆஸ்திரேலியாவின் பிரபல சிகையலங்கார நிபுணர் ஜோர்டான் தபக்மேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், 'கிங்'கிற்கு புத்தி கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. விராட்கோலி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்று ஜோர்டான் தபக்மேன் பதிவிட்டுள்ளார். கோலியின் இந்த புதிய லுக் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.