என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஐ.பி.எல். 2025: கேப்டனை அறிவித்த லக்னோ அணி
- ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்.
- புதிய சீசன் துவங்கும் முன் அந்த அணியில் இருந்து விலகினார்.
ஐ.பி.எல். 2025 சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்-ஐ கடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தின் போது லக்னோ அணி ரூ. 27 கோடிக்கு எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
ரிஷப் பண்ட்-ஐ தங்கள் அணியில் தக்க வைக்க டெல்லி அணி ரைட்-டு-மேட்ச் முறையை பயன்படுத்த முயற்சித்தது. எனினும், லக்னோ அணி ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுத்தது. கடந்த 2021, 2022 மற்றும் 2024 ஐ.பி.எல். சீசன்களில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில், புதிய சீசன் துவங்கும் முன் ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து விலகினார்.
கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ரூணல் பாண்டியா வரிசையில், ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நான்காவது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். "ரிஷப் பண்ட் அதிக மதிப்புமிக்க வீரர் என்பதை தாண்டி அவர் ஐ.பி.எல்.-இல் சிறந்த வீரராகவும் இருப்பார்," என்று லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்தார்.
ஐ.பி.எல். 2022 மற்றும் 2023 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், மிக மோசமான நெட் ரன்-ரேட் அடிப்படையில் ஏழாவது இடம் பிடித்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐ தொடர்ந்து ரிஷப் பண்ட் கேப்டன் ஆகியிருக்கும் இரண்டாவது ஐ.பி.எல். அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இருக்கும்.