என் மலர்
கிரிக்கெட் (Cricket)
நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் மார்ட்டின் கப்தில் ஓய்வு
- சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு.
- சிறந்த வீரர்களுடன் விளையாடியதை என்றும் மறக்க மாட்டேன்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான மார்ட்டின் கப்தில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
சிறிய வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவு. எனது நாடுக்காக 367 போட்டிகள் விளையாடியதற்கு நான் அதிர்ஷ்டம் நிறைந்தவனாக உணர்கிறேன். வெள்ளி நிறத்திலான பெரணி செடி பதிந்த நியூசிலாந்து அணியின் சீறுடையில் சிறந்த வீரர்களுடன் விளையாடியதை என்றும் மறக்க மாட்டேன்.
எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி. எனது அணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றி. குறிப்பாக எனது யு-19 பயிற்சியாளர் மார்க் ஓ'டொன்னெலுக்கு எனது சிறப்பான நன்றி.
எனது மனைவி லாரா, அழகான குழந்தைகள் ஹார்லி, டெடி அவர்களுக்கும் நன்றி. எனக்காகவும் நமது குடும்பத்துக்காகவும் தியாகம் செய்த மனைவி லாராவுக்கு மிக்க நன்றி. என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எனக்கு இருந்த மிகப்பெரிய ஆதரவாளர் நீதான். நான் அதற்காக கடமைப்பட்டுள்ளேன். அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி.
38 வயதாகும் மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து அணிக்காக 198 ஒருநாள் போட்டிகள், 122 டி20 போட்டிகள், 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 23 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்களும் டி20 போட்டிகளில் 3,531 ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.