என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் நீக்கம்
- மிட்செல் மார்ஷ் 7 இன்னிங்சில் 73 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
- 33 ஓவர்கள் வீசி 3 விக்கெட் எடுத்ததால் அணியில் இருந்து நீக்கம்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 4 போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும், இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. சிட்னி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார். அவர் நான்கு டெஸ்டிலும் 73 ரன்கள் (7 இன்னிங்ஸ்) மட்டுமே அடித்துள்ளார். 33 ஓவர்கள் வீசி 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
"எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பியூ வெப்ஸ்டர் மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். போதுமான ரன்கள் அடிக்கவில்லை என்பது மிட்செல் மார்ஷ்க்கு தெரியும்" என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
வெப்ஸ்டர் கடந்த நவம்பர் மாதம் இந்தியா ஏ அணிக்கு எதிராக விளையாடினால். முதல்தர கிரிக்கெட்டில் 5247 ரன்கள் அடித்துள்ள நிலையில், 148 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.






