என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் டா.. மகனுடன் இணைந்து விளையாட போகும் முகமது நபி
By
மாலை மலர்18 Feb 2025 8:57 PM IST

- சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முகமது நபி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
- தனது மகனுடன் இணைந்து மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடப் போவதாக முகமது நபி தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி இடம் பெற்றுள்ளார். 40 வயதான அவர் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 18 வயதான தனது மகன் ஐசாகிள், ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட உள்ளதால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். தனது மகனுடன் இணைந்து மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போவதாக முகமது நபி தெரிவித்துள்ளார்.
நபியின் மகன் ஐசாகிள், 2024-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் நான்கு போட்டிகளில் விளையாடி 43 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
Next Story
×
X