என் மலர்
கிரிக்கெட் (Cricket)
கஸ் அட்கின்சன் ஹாட்ரிக்: முதல் இன்னிங்சில் 125 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அட்கின்சன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
வெல்லிங்டன்:
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வெல்லிங்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. ஒரு கட்டத்தில் 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் ஹாரி ப்ரூக் (123) சதமும், ஒல்லி போப் (66) அரைசதமும் அடிக்க இங்கிலாந்து 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டும், ஓருக்கே 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். கேன் வில்லியம்சன் ஓரளவு தாக்குப்பிடித்து 37 ரன்கள் எடுத்தார். இறுதியில், நியூசிலாந்து முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அட்கின்சன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன், பிரைடன் கேர்ஸ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.