என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இந்தியாவுடன் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் விளையாடக்கூடாது- முன்னாள் வீரர் வலியுறுத்தல்
- என்னிடம் அதிகாரம் இருந்திருந்தால் இந்த முடிவை தைரியமாக எடுத்திருப்பேன்.
- இந்த விவகாரத்தில் நான் யார் மீதும் குற்றம் சாட்டமாட்டேன்.
புதுடெல்லி:
பாகிஸ்தானில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில், 8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக தங்களுக்குரிய ஆட்டங்களை துபாய்க்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொதித்து போய் உள்ளது. இந்திய அணி வராவிட்டால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் முடிவை கைவிடுவது, ஐ.சி.சி. மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பாகிஸ்தான் ஆராய்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எதுவும் ஒத்துவராவிட்டால் ஒட்டுமொத்த போட்டியையும் வேறு நாட்டுக்கு மாற்றலாமா? என்றும் ஆலோசிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணிக்காக 203 சர்வதேச போட்டிகளில் ஆடியவரான முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷித் லத்தீப் கருத்து தெரிவிக்கையில், 'இந்தியாவுக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பாகிஸ்தான் முற்றிலும் நிறுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. என்னிடம் அதிகாரம் இருந்திருந்தால் இந்த முடிவை தைரியமாக எடுத்திருப்பேன். இந்த விவகாரத்தில் நான் யார் மீதும் குற்றம் சாட்டமாட்டேன்.
ஆனால் நீங்கள் (இந்தியா) பாகிஸ்தான் மண்ணில் விளையாட விரும்பவில்லை என்றால், அதன் பிறகு நீங்கள் உலகின் எந்த இடத்திலும் எங்களுக்கு எதிராக விளையாடக் கூடாது. இந்த பிரச்சினைக்கு சுமுக முடிவு எட்டப்படாத வரை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டுக்கும் பெரிய தொடர்களை நடத்தும் வாய்ப்பை வழங்குவதை ஐ.சி.சி. நிறுத்தி வைக்க வேண்டும் என்பதே எனது கருத்து' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்