search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
    X

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

    • சஜித் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கஷிப் அலி பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியிம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர சுழறபந்துவீச்சாளர் சஜித் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் தொடர்ச்சியாக விளையாடி வரும் நசீம் ஷா, அமர் ஜமால், முகமது அப்பாஸ், மிர் ஹம்ஸா ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கஷிப் அலி பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் டெஸ்ட் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அப்ரார் அகமது, பாபர் ஆசம், இமாம்-உல்-ஹக், கம்ரான் குலாம், காஷிப் அலி, குர்ரம் ஷஷாத், முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நோமன் அலி, ரோஹைல் நசீர், சஜித் கான் மற்றும் சல்மான் அலி ஆகா.

    வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜோசுவா டா சில்வா (துணை கேப்டன்), அலிக் அதானஸ், கேசி கார்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அமீர் ஜங்கு, மைக்கேல் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஆண்டர்சன் பிலிப், கீமார் ரோச், கெவின் சின்க்ளேர், ஜெய்டன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்

    Next Story
    ×