search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் டிராபியில் விலகல்.. ஐபிஎல் தொடரில் களமிறங்கும் பேட் கம்மின்ஸ்
    X

    சாம்பியன்ஸ் டிராபியில் விலகல்.. ஐபிஎல் தொடரில் களமிறங்கும் பேட் கம்மின்ஸ்

    • இந்தியா- ஆஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடருடன் பேட் கம்மின்ஸ் எந்த தொடரில் விளையாடவில்லை.
    • தற்போது காயம் சரியாகி உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதாக கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

    இந்த தொடருக்கான அட்டவணை சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதன்படி மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 25-ந் தேதி முடிகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்த தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் களமிறங்க உள்ளார். இந்திய அணிக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் பங்கேற்வில்லை. இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகினார். அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    கம்மின்ஸ் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் மற்றும் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் போட்டிகளை பயன்படுத்த உள்ளதாகவும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×