search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒற்றை கையால் பாய்ந்து கேட்ச் பிடிச்ச ரமன்தீப் சிங் - வீடியோ வைரல்
    X

    ஒற்றை கையால் பாய்ந்து கேட்ச் பிடிச்ச ரமன்தீப் சிங் - வீடியோ வைரல்

    • ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின.
    • இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடர் ஓமன் நாட்டில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் இந்த தொடர் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 44 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 36 ரன்களும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அராபத் மின்ஹாஸ் 41 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும் ராசிக் சலாம் மற்றும் நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்

    இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி வந்த யாசிர் கான் தூக்கி அடித்த பந்தை ஓடிச்சென்று பாய்ந்து ஒற்றை கையால் ரமன்தீப் சிங் பிடித்தார்.

    ரமன்தீப் சிங்கின் அந்த கேட்ச் ஒரு இந்தியரின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்று என்று முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.

    Next Story
    ×