என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபி அணியை 125 ரன்னில் அடக்கியது குஜராத்

- ராகவி 22 ரன்னிலும் கனிகா 33 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
- குஜராத் தரப்பில் டியாண்ட்ரா டாட்டின், தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பெங்களூரு:
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வயட்-ஹாட்ஜ் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே ஆர்சிபி-க்கு அதிர்ச்சி காத்திருந்தது. 25 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மந்தனா 10, டேனியல் வயட்-ஹாட்ஜ் 4, எலிஸ் பெர்ரி 0 என வெளியேறினர். இதனையடுத்து ராகவி- கனிகா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது. ராகவி 22 ரன்னிலும் கனிகா 33 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.
குஜராத் தரப்பில் டியாண்ட்ரா டாட்டின், தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.