search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கரீபியன் பிரீமியர் லீக்: டு பிளிஸ்சிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் சாம்பியன்
    X

    கரீபியன் பிரீமியர் லீக்: டு பிளிஸ்சிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் சாம்பியன்

    • முதலில் விளையாடி கயானா 138 ரன்களே சேர்த்தது.
    • செயின்ட் லூசியா 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்றது. இதில் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ்- இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய கயானா அணியால் 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அநத அணியின் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 22 ரன்களும், பிரிட்டோரியஸ் 25 ரன்களும் சேரத்தனர். செயின்ட் லூசியா அணி சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா அணி களம் இறங்கியது. ராஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் விளாச செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

    Next Story
    ×