search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 615 ரன்கள் குவிப்பு
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 615 ரன்கள் குவிப்பு

    • ரியான் ரிக்கெல்டன் 259 ரன்கள் குவித்தார்.
    • பவுமா மற்றும் கைல் வெர்ரைன் சதம் அடித்தனர்.

    தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. ரியான் ரிக்கெல்டன், பவுமா ஆகியோரின் சதத்தால் தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது. ரிக்கெல்டன் 176 ரன்களுடனும், பெடிங்காம் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பெடிங்காம் 5 ரன்னில் வெளியேறிய நிலையில் அடுத்து விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் களம் இறங்கினார். இவர் ரிக்கெல்டனுடன் சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிக்கெல்டன் இரட்டை சதம் விளாசி 259 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 100 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சன் 54 பந்தில் 62 ரன்கள் விளாசினார். கேஷப் மகாராஜ் 35 பந்தில் 40 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 141.3 ஓவர்களில் 615 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா தலா 3 விக்கெட்டும் மிர் ஹம்சா, குர்ராம் ஷேசாத தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×