என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்- பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்- பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9083932-glenphilips0802.webp)
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்- பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார்.
- பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. லாகூரில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் வில் யங் 4 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினர்.
அதன்பின் வந்த கேன் வில்லிம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேன் வில்லியம்சன் 89 பந்தில் 58 ரன்களும், டேரில் மிட்செல் 84 பந்தில் 81 ரன்களும் சேர்த்தனர்.
6-வது வீரரான களம் இறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாச நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 10 ஓவரில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அப்ரார் அகமது 10 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 331 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.