search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    12 ரன் தேவை.. கைவசம் 2 விக்கெட்..  சிக்சர் விளாசி finish செய்த இஷான் கிஷன்.. வீடியோ
    X

    12 ரன் தேவை.. கைவசம் 2 விக்கெட்.. சிக்சர் விளாசி finish செய்த இஷான் கிஷன்.. வீடியோ

    • ஜார்கண்ட் அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மத்தியபிரதேசம்.
    • 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ஜார்கண்ட் அணி ருசித்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு நினைவு அகில இந்திய கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நெல்லை, சேலம், கோவை, நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    இதில் மத்தியபிரதேசம்- ஜார்கண்ட் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நெல்லையில் நடந்தது. முதல் இன்னிங்சில் மத்தியபிரதேசம் 225 ரன்னும், ஜார்கண்ட் 289 ரன்னும் எடுத்தது. 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேசம் 238 ரன்களில் அடங்கியது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜார்கண்ட் 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதி கட்டத்தில் 8 விக்கெட்களை ஜார்கண்ட் அணி இழந்திருந்தது. கடைசி 12 ரன்கள் தேவை என்ற நிலையில் இஷான் கிஷன் 2 சிக்சர்களை விளாசினார்.

    இதனால் 54.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ஜார்கண்ட் அணி ருசித்தது. கேப்டன் இஷான் கிஷன் 41 ரன்களுடன் களத்தில் இருந்தார். கேப்டனாக இஷான் கிஷன் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று 2 சிக்சர்களுடன் முடித்து வைத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×