என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரீமியர் லீக்: டெல்லிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

- கடைசி வரை ஒற்றை ஆளாக போராடிய பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- டெல்லி அணி தரப்பில் ஷிகா பாண்டே, மாரிசேன் காப், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பெங்களூரு:
மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) தொடரின் 3வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் குஜராத் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து டியாண்ட்ரா டாட்டின் 26, தனுஜா கன்வர் 16 என அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
கடைசி வரை ஒற்றை ஆளாக போராடிய பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணி தரப்பில் ஷிகா பாண்டே, மாரிசேன் காப், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.