என் மலர்
விளையாட்டு

காமன்வெல்த் துவக்க விழாவில் பங்கேற்ற இலங்கை வீரர்கள்
காமன்வெல்த் கிராமத்தில் இருந்து இலங்கை வீரர்கள் மாயம்- போலீஸ் விசாரணை
- வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
- இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு பங்கேற்பு
பர்மிங்காம்:
பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் அனைவரும் விளையாட்டு கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில், காமன்வெல்த் கிராமத்தில் இருந்து இலங்கையைச் சோந்த 2 வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரியை திடீரென காணவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரர்கள் காணாமல் போனதையடுத்து, போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும், அவர்கள் தங்கியிருக்கும் விளையாட்டு கிராம அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.