search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    சவுதி கால்பந்து கோப்பை இறுதிப்போட்டி: அல்- ஹிலால் அபார வெற்றி.. ரொனால்டோ கொடுத்த ரியாக்ஷன் - வீடியோ
    X

    சவுதி கால்பந்து கோப்பை இறுதிப்போட்டி: அல்- ஹிலால் அபார வெற்றி.. ரொனால்டோ கொடுத்த ரியாக்ஷன் - வீடியோ

    • இறுதிப்போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது.
    • தோல்வியடைந்த விரக்தியில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்ற நிலையில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44 வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அல்- நாசர் அணியின் ஆட்டதை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றார்.

    ஆனால் அதைதொடர்நது மைதானம் அல்- ஹிலால் வசம் சென்றது. ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் அல்- ஹிலால் அணி வீரர் செர்ஜி மிலின்கோவிக் கோல் ஒன்றை விளாசி புள்ளிப் பட்டியலை சமன் செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 63 மற்றும் 69 வது நிமிடத்தில் அல் ஹிலால் வீரர் அலெக்சாண்டர் மித்ரோவிசிக் 2 அடுத்தடுத்து கோல்களை விளாசினார்.

    இறுதியாக ஆட்டத்தின் 72 வது நிமிடத்தில் அல்- ஹிலால் வீரர் மால்கம் ஒரு கோல் ஸ்கோர் செய்தார். இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணி ரொனால்டோவின் அல்- நாசர் அணியை தோற்கடித்து கோப்பையைத் தட்டிச் சென்றது.

    உலகக்கோப்பை வென்ற மெஸ்ஸி ஸ்டைலில் அல்-ஹிலால் அணி கேப்டன் சலீம் அல் - தாஸ்ரி [Salem Al-டவ்சரி] கோப்பையை பெற்றுகொள்ள கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதற்கிடையில் தோல்வியடைந்த விரக்தியில் எல்லாரும் தூங்கிறார்கள், எல்லாம் முடிந்தது என்ற தோரணையில் மைதானத்தில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×