search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    வெற்றியும் தோல்வியும் பார்க்க இப்படித் தான் இருக்கும்.. ஒலிம்பிக்ஸ் டென்னிசில் நெகிழ்ச்சி - வீடியோ
    X

    வெற்றியும் தோல்வியும் பார்க்க இப்படித் தான் இருக்கும்.. ஒலிம்பிக்ஸ் டென்னிசில் நெகிழ்ச்சி - வீடியோ

    • ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    • தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டு என்பதையும் கடந்து வீரர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அது அழுகையாக வெளிப்படுகிறது. இது ரசிகர்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

    அந்த வகையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடையே நடந்த போட்டியானது அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று நடந்த இந்த டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸிடம் ஜோகோவிச் தோற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இது இரு வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாக அமைந்தது.

    பார்வையாளர்கள் இடத்தில் இருந்த தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தோல்வியால் கார்லோஸ் அல்காரஸ் கண்கலங்கும் காட்சிகளும் ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது.

    Next Story
    ×