search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் ரூபினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
    X

    பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவின் ரூபினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

    • பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.

    ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் 7-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று மாலை இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    Next Story
    ×