search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி ஜோடி
    X

    சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி ஜோடி

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்தது.
    • இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி, சாரா எர்ரானி ஜோடி-தைவானின் சான் ஹாவ் சிங், ரஷியாவின் வெரோனிகா ஜோடியுடன் மோதியது.

    இதில் இத்தாலி ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    சீனா ஓபன் தொடரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×