search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தகுதி நீக்கம் குறித்து மவுனம் களைத்த வினேஷ் போகத்
    X

    தகுதி நீக்கம் குறித்து மவுனம் களைத்த வினேஷ் போகத்

    • வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம்.
    • இந்திய பயிற்சியாளர்களிடம் வினேஷ் போகத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    பின்னர், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைதொடர்ந்து, மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தனர்.

    அப்போது, "இது விளையாட்டின் ஒரு பகுதி" என்று இந்திய பயிற்சியாளர்களிடம் வினேஷ் போகத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து இந்திய பயிற்சியாளர்கள் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் மல்யுத்தக் குழுவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. செய்தி வெளியான பிறகு வீராங்கனைகள் மிகவும் மோசமாக உணர்ந்தனர். நாங்கள் வினேஷைச் சந்தித்து ஆறுதல் கூற முயற்சித்தோம். அவள் தைரியமாக இருந்தாள்.

    அவர் எங்களிடம்," நாங்கள் பதக்கத்தைத் தவறவிட்டது கடினமான துரதிர்ஷ்டம். ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி" என்று கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×