search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன்: பிரதமருக்கு டுவீட் போட்ட மல்யுத்த வீரர்
    X

    பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன்: பிரதமருக்கு டுவீட் போட்ட மல்யுத்த வீரர்

    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது.
    • அதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் தேர்வானார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்கமுடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இந்நிலையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×