search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொர்க்கவாசல் திறப்புக்காக வந்தபோது உடல் நலம் பாதித்து தரையில் படுத்துக்கொண்ட யானை
    X

    சொர்க்கவாசல் திறப்புக்காக வந்தபோது உடல் நலம் பாதித்து தரையில் படுத்துக்கொண்ட யானை

    • விருதுநகருக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட அந்த யானையை கீழே இறக்க முயற்சித்தனர்.
    • ஏற்கனவே இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தபோது கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.

    விருதுநகர்:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ஒரு கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ராஜபாளையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான யானை வரவழைக்கப்பட்டது.

    விருதுநகருக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட அந்த யானையை கீழே இறக்க முயற்சித்தனர். இறக்கிய பின்னர் அந்த யானை, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு தரையில் படுத்துக்கொண்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் கால்நடை துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கோவில் ராஜா மற்றும் டாக்டர்கள் விரைந்து வந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதுபற்றி கால்நடைத்துறை அதிகாரி கூறியதாவது:-

    ஏற்கனவே இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தபோது கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதே யானைக்கு மூன்று மாதம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனாலும் யானையின் உரிமையாளர்கள் தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு யானையை அழைத்து வரும் நிலை உள்ளது. தற்போதும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. யானைக்கு 56 வயதாகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×