என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீ விபத்தில்லா தீபாவளி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளிடம் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
    X

    "தீ விபத்தில்லா தீபாவளி" மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளிடம் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு

    • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.
    • பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து கொண்டாட வேண்டும் என "விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி" என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய ரமேஸ்பாபு அதிகாரி தலைமையில் மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளிடம் பட்டாசுகளை வெடிக்க தவிர்க்க வேண்டிய இடங்கள், வெடிக்கும் முறை, அதற்கான இடம், நேரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரச்சாரம் செய்தனர், பின்னர் அதற்கான விபரங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    Next Story
    ×