என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மாமல்லபுரம் புராதன சின்னங்களை மக்களோடு சுற்றிப்பார்த்த முன்னாள் ஜனாதிபதி
Byமாலை மலர்3 Jan 2023 5:50 PM IST
- மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.
- சுற்றுலா பயணிகளை ராம்நாத் கோவிந்த் அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மாமல்லபுரம்:
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார். முன்னதாக கடற்கரை கோயில் நுழைவுவாயில் பகுதியில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், அவருக்கு நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.
சுற்றுலா பயணிகள் யாரையும் தடுத்து நிறுத்தாமல் ராம்நாத் கோவிந்த், மக்களோடு மக்களாக புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.
அவரை அடையாளம் கண்ட வடமாநில சுற்றுலா பயணிகள் சிலர் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். அவர்களை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், வருவாய்த்துறை மற்றும் தொல்லியல்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story
×