என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
'கலவரம் செய்தால்தான்'.. இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் கைது
- நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம்.
- கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக, பாஜக கூட்டணி தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சி செயலாளர், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில், "தமிழ்நாட்டில் 40 இடங்களில் ஒன்றில் கூட நம்மால் வெல்ல முடியவில்லை. இது வேதனையாக உள்ளது. நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம். கலவரம் பண்ணாதான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியும்" என்று பேசியுள்ளனர்.
இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் உடையார் நெல்லையில் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை எஸ்.ஐ. துரைபாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதரீதியான பிரச்சனையை தூண்டியது, பொது அமைதியை குலைத்தல், அவதூறு பரப்புதல் என 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.