search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைகிறது?
    X

    பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைகிறது?

    • சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
    • அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த போதிலும் பெட்ரோல்- விலை குறைக்கப்பட வில்லை. முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விட்டது. சில நகரங்களில் ரூ.1100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையை பொறுத்தவரை கடந்த 586 நாட்களாக பெட்ரோல் விலை லிட்டர் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவலால் ஊரடங்கு,ரஷியா - உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டதால் பெட்ரோல்- டீசல் விலை குறையாமல் அதே விலை நீடிக்கிறது.

    இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு கீழ் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×