என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
Byமாலை மலர்23 May 2024 12:29 PM IST
- காரில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கஞ்சா வழக்கில் ஜாமின் கேட்டு சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
மதுரை:
யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர் தேனியில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காரில் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் ஜாமின் கேட்டு சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Next Story
×