search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- ரூ.904 கோடியில் டெண்டர் கோரியது சிப்காட்
    X

    தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்- ரூ.904 கோடியில் டெண்டர் கோரியது சிப்காட்

    • நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது.
    • அரசு, தனியார் பங்களிப்பின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த முடிவு.

    தூத்துக்குடியில் முதல்முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    முள்ளக்காடு கிராமத்தில் ₹904 கோடியில் இதனை செயல்படுத்த சிப்காட் டெண்டர் கோரியுள்ளது.

    நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது எனவும் அரசு, தனியார் பங்களிப்பின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

    Next Story
    ×