என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
லோடு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 35 கிலோ பீடிஇலைகள் பறிமுதல்- 2 பேர் தப்பி ஓட்டம்
- வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கு வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரை சாலை ரோச் பூங்கா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்ததது. அப்போது போலீசாரை பார்த்ததும் ஆட்டோவில் இருந்த 2 பேர் தப்பிச் சென்றனர்.
போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 42 மூட்டைகளில் 35 கிலோ பீடிஇலைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பீடிஇலைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பீடிஇலைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? பீடிஇலைகள் இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா? இதில் தொடர்புடையவர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தி, தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடிஇலைகள், மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.