என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டி- வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்: ஓ.பி.எஸ்
    X

    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டி- வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்: ஓ.பி.எஸ்

    • பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம்.
    • பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம்.
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் போட்டியில் களமிறங்கி வெற்றிக்காண தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திமுக சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

    இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதுதொடர்பாக, ஓபிஎஸ் தரப்பில் மவுனம் காத்து வந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது நிலைபாட்டை தற்போது அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோர அதிமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் இன்று பாஜக தலைவர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.

    இரட்டை இலை சின்னம் பெற எங்களுக்கு தான் முழு உரிமை உள்ளது. ஒங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். 2026ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் போட்டியிட முழு உரிமை உள்ளது.

    இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்.

    சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

    பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம்.

    கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம்.

    ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு உரிமை உள்ளது.

    இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன். பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.

    ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார். ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை ஈபிஎஸ் தரப்படன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

    ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×