என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சுசீந்திரம் அருகே அதிகாலையில் சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு- பொதுமக்கள் அதிர்ச்சி
- பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
- பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள பதினெட்டாம் படி பகுதியில் நெல் வயல்கள் மற்றும் பாசன குளங்கள் உள்ளன. இங்கு முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
அவர்கள் அதிகாலையிலேயே வயல்களுக்கு சென்று பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை வயல் பணிகளுக்குச் சென்ற அவர்கள், பதினெட்டாம்படி அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே ஏதோ ஊர்ந்து செல்வதை பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது, அது மலைப்பாம்பு என தெரியவர அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெரிய அளவிலான மலைப்பாம்பை கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர். மேலும் சிலர் அங்கு வந்ததும் மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு வேறு எங்கோ சென்று பதுங்கி விட்டது.
அந்த பகுதியில் உள்ள குளங்களில் மீன் பிடிப்பவர்கள் வலை விரித்துள்ளதால், அருகில் உள்ள மலைகளில் இருந்து பாம்புகள் அடிக்கடி குளங்களுக்கு வருவதாகவும் இதனால் காலையில் வயல் பணிக்கு செல்வது ஆபத்தாக உள்ளது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.