என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.89 லட்சம்
- திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
- தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையடுத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம், மற்றும் திருத்தணி முருகன் கோவில் உடன் இணைந்த உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தும் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோவில் பணியாளர்களை கொண்டு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 27 நாட்களில் ரூ.89 லட்சத்து 3 ஆயிரத்து 193 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.