search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக இளைஞரணி மாநாடு- சுடரினை முதலமைச்சரிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
    X

    திமுக இளைஞரணி மாநாடு- சுடரினை முதலமைச்சரிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்

    • இளைஞரணி மாநாட்டையொட்டி நிகழ்ச்சிகள் இன்றே தொடங்கின.
    • டிரோன் கேமரா கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி (நாளை) மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் கடந்த 18ம் தேதி அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே காலை 7 மணியளவில் சுடர் தொடர் ஓட்டத்தை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டு சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று மாலை ஒப்படைத்தனர்.

    பிறகு, மாநாட்டு சுடரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார்.

    மேலும், இளைஞரணி மாநாட்டையொட்டி நிகழ்ச்சிகள் இன்றே தொடங்கின.

    இதில், டிரோன் கேமரா கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    ட்ரோன் வாயிலாக வானில் பெரியார், அண்ணா, கருணாநிதி, உதயசூரியன், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் ஒளிர்ந்தன.

    Next Story
    ×