என் மலர்
தமிழ்நாடு
தகுதி சான்று பெற ஒரே நாளில் குவிந்த 50 சுற்றுலா வாகனங்கள்- அதிகாரிகள் திணறல்
- சாலையோரம் நீண்ட தூரத்திற்கு அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
- சுற்றுலா வேன், பஸ்கள் கடந்த ஒரு மாதமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வந்து சென்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள சுற்றுலா வாகனங்களுக்கு திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று, அனுமதி சான்று, சாலை வரி உள்ளிட்டவையை வழங்கப்படுகிறது. தற்போது ஏராளமான பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்ல சுற்றுலா வாகனங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெற தொடர்ந்து சுற்றுலா வேன், பஸ்கள் கடந்த ஒரு மாதமாக திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வந்து சென்றன.
அப்போது விதிகளை மீறி அகலம், வண்ணம் உயரம் ஒலிபெருக்கி மின்விளக்கு பல்வேறு காரணங்களுக்காக மோட்டர் வாகன ஆய்வாளர் நிராகரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விடுப்பில் சென்றுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலத்தில் குவிந்தன. இதனால் அதிகாரிகள் திணறினர். சாலையோரம் நீண்ட தூரத்திற்கு அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொறுப்பு மோட்டார் வாகன ஆய்வாளர் அந்த வாகனங்களுக்கு தகுதிச் சான்று அளிக்காமல் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.