என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பள்ளிப் பேருந்தில் மோதல் - 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு பள்ளிப் பேருந்தில் மோதல் - 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9194713-school-bul-salem.webp)
X
பள்ளிப் பேருந்தில் மோதல் - 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
By
மாலை மலர்11 Feb 2025 5:17 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பேருந்து சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது.
- பேருந்தில் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்கல் நேற்று பள்ளி முடிந்து பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X