search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்: 10 ஆயிரம் கொடுத்து ஏலத்தில் எடுத்த உரிமையாளர்
    X

    உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்: 10 ஆயிரம் கொடுத்து ஏலத்தில் எடுத்த உரிமையாளர்

    • கடந்த 2 மாதத்துக்கு முன்பு முருகன் கோவிலில் தினேஷ் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
    • அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார்.

    திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக அங்குள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

    அப்படி கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தியபோது தவறுதலாக தன்னுடைய ஐபோனையும் போட்டு விட்டார். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது என தெரிவித்தனர்.

    வேண்டுமென்றால் உங்களுடைய முக்கியமான தரவுகள் ஏதேனும் செல்போனில் இருந்தால் அவற்றை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி கைவிரித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து அந்த செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு சென்றார். காணிக்கை பணத்துடன் பக்தர் செலுத்திய ஐபோனும் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது ஏலத்தில் தன்னுடைய செல்ஃபோனை தானே எடுத்துள்ளார் தினேஷ். இதுபற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், உண்டியலில் விழுந்த பொருட்களை சட்டப்படி ஏலத்தில் விட வேண்டும் என்ற அடிப்படையில், செல்ஃபோனை ஏலத்தில் விட்டோம். ஏலத்தில் சென்ற அந்த செல்போனை, அதன் உரிமையாளரே 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×