search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன்- கடை உரிமையாளர் உள்பட இருவர் கைது
    X

    டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன்- கடை உரிமையாளர் உள்பட இருவர் கைது

    • இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் புகார்.
    • சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

    திருச்சியில், டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்கள் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் செய்து வந்தார்.

    இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

    இந்நிலையில், டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றிவந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×