search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொது இடங்களில் கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? நீதிமன்றம் கேள்வி
    X

    பொது இடங்களில் கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? நீதிமன்றம் கேள்வி

    • விளாங்குடியில் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரிய வழக்கு தொடரப்பட்டது.
    • டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

    பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விளாங்குடியில் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இதுதொடர்பான விசாரணையின்போது, " கொடி மரங்களால் எத்தனை விபத்துகள் நடந்துள்ளது ? எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது ?" என்று டிஜிபி பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அப்போது, பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    தாமாக முன்வந்து டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×