என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் சோகம் - விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி
    X

    துப்பாக்கிச்சூடு

    அமெரிக்காவில் சோகம் - விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

    • அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
    • அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    விர்ஜீனியா:

    அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர் என விர்ஜீனியா பல்கலைக்கழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    நேற்றிரவு நடந்த இந்தத் தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என பல்கலைக்கழக நிர்வாக தலைவர் ஜிம் ரியான் தெரிவித்தார்.

    சந்தேகிக்கப்படும் குற்றவாளியான அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு, தேடி வருகின்றனர். அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×