search icon
என் மலர்tooltip icon

    ஆப்பிரிக்கா

    • 4 முறை இரட்டை குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் 5 முறை பிறந்துள்ளது.
    • மரியத்தின் சொத்துக்களை எல்லாம் எடுத்து கொண்டு அவரது கணவர் குடும்பத்தை விட்டு ஓடி விட்டார்.

    ஆப்பிரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்தவர் மரியம் நபடான்சி. இவருக்கு இளம் வயதிலேயே திருமணமாகி உள்ளது. அதாவது மரியத்திற்கு 12 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அவர் தனது 13-வது வயதிலேயே கர்ப்பமானார். அவருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இவர் தான் உலகின் மிகவும் ஸ்பெர்டைல் பெண்ணாக கருதப்படுகிறார்.

    அதன் பிறகு தொடர்ந்து குழந்தைகள் பெற்றெடுத்த மரியத்திற்கு தற்போது 40 வயது ஆகிறது. இதுவரை அவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் 4 முறை இரட்டை குழந்தைகளும், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் 5 முறை பிறந்துள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு இருக்கும் ஹைப்பர் ஓவுலேட் என்ற நிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவர் மொத்தம் 44 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் அதில் 6 குழந்தைகள் உயிரிழந்து விட்டது.

    இப்போது 20 சிறுவர்களும், 18 சிறுமிகளும் மட்டுமே இருக்கிறார்கள். மரியத்தின் சொத்துக்களை எல்லாம் எடுத்து கொண்டு அவரது கணவர் குடும்பத்தை விட்டு ஓடி விட்டார். இதனால் மரியம் தனது குழந்தைகளை வளர்க்க கஷ்டப்பட்டு வருகிறார்.

    • கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல்.

    கம்பாலா:

    உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.

    அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

    இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

    ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

    அவர் கூறும்போது, இந்த மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் நமது பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவுவதாகும் என்றார்.

    இந்த மசோதா பாராளுமன்றததில் 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. தற்போது மசோதா, ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இதற்கிடையே ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்தனர்.

    மனித உரிமை ஆர்வலர் சாரா கசண்டே கூறும்போது, "உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கிறது" என்றார்

    ஓரினச் சேர்க்கை ஆர்வலர் எரிக் நடாவுலா கூறும் போது, "பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களின் தீர்ப்பு வெறுப்பு மற்றும் ஓரினச் சேர்க்கையால் மழுங்கடிக்கப்பட்டது பயமாக இருக்கிறது. இந்தக் கொடூர சட்டத்தால் யாருக்கு லாபம்?" இந்த மசோதா சட்டமாக கையொப்பமிடப்பட்டால், "கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டான உரிமைகள் உள்பட பல அடிப்படை உரிமைகளை மீறும்" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    • கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
    • சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

    அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

    பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டை பிரெட்டி என்ற பருவகால சூறாவளி தாக்கியது.
    • இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 326 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    மலாவி:

    கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும். இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய அமைச்சக அறிக்கை எச்சரித்து இருந்தது. இதற்கேற்ப சூறாவளி புயலால் பரவலாக பாதிப்பு ஏற்பட்டது என இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்துள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்துள்ளது.

    அந்த அறிக்கையில், நிலைமை மோசமடைந்து எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. இதேபோல், பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என அந்தத் துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார்.

    இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 326 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. தெளிவற்ற வானிலையால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    • தெற்கு மலாவியில் நிலைமை இன்று மோசமடைந்து உள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்து உள்ளது.
    • சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது.

    கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி என்கிற நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீசகூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றி மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும்.

    இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய அமைச்சக அறிக்கை எச்சரித்து இருந்தது.

    இதற்கேற்ப சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தெற்கு மலாவியில் நிலைமை இன்று மோசமடைந்து உள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்து உள்ளது.

    அந்த அறிக்கையில், இன்று நிலைமை மோசமடைந்து, எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது.

    இதேபோன்று, பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என அந்த துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார்.

    இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 190 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 584 பேர் காயமடைந்து உள்ளதாகவும், 37 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

    தெளிவற்ற வானிலையால் மீட்பு பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது. நிலைமை நாளை சீரடைய கூடும் என்றும் சூறாவளி கடந்து சென்று விடும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • மடகாஸ்கரில் கடலில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    அன்டநானரிவோ:

    ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர். அப்போது இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது.

    தகவலறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக கடலுக்குள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    • அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயாராக உள்ளார்.
    • அதிபராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவரது வயது ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பயணத்தின் கடைசி கட்டமாக நேற்று கென்யா சென்றார். அங்கு தலைநகர் நைரோபியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயாராக இருப்பதாக கூறினார்.

    முன்னதாக, அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தனது நோக்கம் என்று ஜோ பைடன் நீண்ட காலமாக கூறியிருந்தாலும், அவர் அதை இன்னும் அதிகாரப்பூர்வமாக்கவில்லை.

    மேலும் அதிபராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவரது வயது ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய பதவிக் காலத்தின் முடிவில் பைடனுக்கு 86 வயது நிரம்பி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொற்று பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
    • உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்கா கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எபோலா, கோவிட் - 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

    வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. மார்பர்க் வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான நோய்க் கிருமியாகும்.

    இது கடுமையான காய்ச்சலை அடிக்கடி இரத்தப்போக்குடன் ஏற்படுத்துகிறது. மேலும் பல உறுப்புகளை பாதிப்படைய செய்து, உடலின் செயல் திறனைக் குறைக்கிறது. இதுவரை 16 பேருக்கு அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

    மேலும், பரவாமல் தடுக்க கிட்டத்தட்ட 200 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது பிலோ வைரஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.

    இதில் எபோலா வைரஸும் அடங்கும். இந்த நிலையில், தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு மார்பர்க் கிருமியின் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மார்பர்க் வைரஸ் தொற்றுக்கு இதுவரை எந்த வித சிகிச்சையோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தறி கெட்டு ஓடிய அந்த பஸ் எதிரே வேகமாக வந்த மற்றொரு பஸ் மீது மோதியது.
    • விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தது.

    காப்ரீன்:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் உள்ள காப்ரீன் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் டயர் பஞ்சரானது. இதனால் தறி கெட்டு ஓடிய அந்த பஸ் எதிரே வேகமாக வந்த மற்றொரு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தது. இதில் 40 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்துக்கு செனகல் நாட்டு அதிபர் மேக்கிசால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். விபத்தில் 40 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டுகிறேன். இன்று முதல் 3 நாட்கள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கபடும் என அவர் கூறினார்.

    செனகல் நாட்டில் மோசமான சாலைகளாலும், போக்குவரத்து விதிமுறைகளை டிரைவர்கள் சரியாக கடைபிடிக்காததாலும் இது போன்று விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார்.
    • திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து மணப்பெண் பேசி இருக்கிறார்.

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் திருமணத்தை மணமகன் நிறுத்தியதும், அவருடன் மணப்பெண் வாக்குவாதம் செய்து அழுது புரண்டு கெஞ்சுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அங்கு ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அந்த மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்துள்ளார். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு தன்னுடைய காதலனை சந்தித்து அந்த பெண் பேசி இருக்கிறார்.

    இந்த தகவல் மணமகனின் காதுக்கு எட்டியது. இதனால் அவர் கடும் கோபம் அடைந்தார். அடாவடியாக திருமணத்தை நிறுத்தினார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மணமகனிடம் ஒரு ரோட்டில் கீழே விழுந்து கட்டிப் புரண்டு கெஞ்சி இருக்கிறார். ஆனால் மணமகனோ அவரை ஏற்க மறுத்து ஆவேசமாக பேசுகிறார்.

    இதுதொடர்பாக விசாரித்தபோது காதலனை மணப்பெண் சந்தித்த தகவலை மணப்பெண்ணின் தோழியே மணமகனிடம் போட்டுக் கொடுத்தது தெரிய வந்தது. மணமகள் கெஞ்சும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • பர்கினோ பாசோவில் போகோஹரம், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
    • இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒவ்கடங்கு:

    ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.

    இந்நிலையில், பர்கினோ பாசோவின் வடக்கே உள்ள போலா பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் அங்கிருந்த அனைவரும் அலறியவாறு ஓட்டம் பிடித்தனர்.

    இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. விசாரணையில், ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பொதுமக்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

    • ஜிம்பாப்வே முதல் முறையாக சிறிய அளவிலான நானோ செயற்கைகோளை விண்ணில் ஏவியது.
    • ஜிம்சாட்-1 தற்போது விண்வெளியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஜிம்பாப்வே முதல் முறையாக சிறிய அளவிலான நானோ செயற்கைகோளை விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டில் ஜிம்சாட்-1 என்று பெயரிடப்பட்ட நானோ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. மேலும் ஜப்பான் விண்வெளி கழகத்தின் பல நாடுகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக உகாண்டாவின் முதல் செயற்கைகோளும் ஏவப்பட்டது.

    இது தொடர்பாக ஜிம்பாப்வே அரசின் செய்தி தொடர்பாளர் நிக் மங்வானா டுவிட்டரில் கூறும்போது, வரலாறு விரிவடைகிறது. ஜிம்சாட்-1 தற்போது விண்வெளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு ஒரு அறிவியல் மைல்கல் என்றார். ஜிம்பாப்வே ஏவிய நானோ செயற்கைகோள், பேரிடர்களை கண்காணிக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும், கனிம வளத்தை மேம்படுத்தவும் உதவும்.

    ×