என் மலர்tooltip icon

    ஆப்பிரிக்கா

    • நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
    • நிகழ்ச்சியில் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    விண்ட்ஹோயிக்:

    ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சி 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

    இந்தநிலையில் தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள நாடாளுமன்றத்தில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது முன்னாள் அதிபர் நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் தான்சானியா அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் ஆப்பிரிக்காவின் 2-வது பெண் அதிபர் என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார்.

    • ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர்.
    • சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

    கின்சாசா:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

    இதற்கிடையே கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர்.

    இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

    இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த கைதிகள் அனைவரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் சுமார் 6 ஆயிரம் கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

    • 5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான்.
    • வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.

    ஜிம்பாப்வே நாட்டின் வடக்குப் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன், சிங்கங்கள், யானைகள் மற்றும் பிற ஆபத்தான வனவிலங்குகளின் இருப்பிடமான மட்டுசடோனா தேசிய பூங்காவின் ஆபத்தான வனப்பகுதியில் ஐந்து நாட்கள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டினோடெண்டா பூண்டு [Tinotenda Pundu] என்று அந்த சிறுவன் டிசம்பர் 27 அன்று வடக்கு ஜிம்பாப்வேயில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே சுற்றித் திரிந்துகொண்டிருந்தபோது சிறுவன் தொலைந்து போனான்

    5 நாட்களுக்கு பிறகு சுமார் 30 மைல்கள் (50 கிமீ) தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டான். நீரிழப்பினால் பலவீனமான நிலையில் சிறுவன் மீட்கப்பட்டான். வறட்சியின்போது தனது கிராமத்தில் கற்றுக்கொடுத்த யுக்திகளை பயன்படுத்தி சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.

     

    சிறுவன் ஒரு ஆற்றங்கரையில் குச்சிகளைப் பயன்படுத்தி தண்ணீரைத் தோண்டி, ட்ஸ்வான்ஸ்வா என்ற காட்டுப் பழத்தை உண்டு வாழ்ந்துள்ளான்.

    சிறுவனின் கதையை விவரித்த உள்ளூர் எம்.பி. முட்சா முரோம்பெட்ஸி, சிறுவன் அலைந்து திரிந்து , திசை தவறி, ஆபத்தான மட்டுசடோன்ஹா பூங்காவிற்குத் தெரியாமல் சென்றுள்ளான்.

    ஹாக்வேக்கு அருகிலுள்ள காட்டில் 5 நீண்ட, கொடூரமான நாட்களுக்குப் பிறகு. உமே நதியின் துணை நதி அருகே சிறுவனை ரேஞ்சர்கள் உயிருடன் கண்டுபிடித்தனர்.

    வீட்டிலிருந்து 23 கிமீ தூரம் அலைந்து திரிந்து, கர்ஜனை செய்யும் சிங்கங்கள், யானைகளைக் கடந்து செல்வது, காட்டுப் பழங்களை உண்பது மற்றும் ஆபத்தான காட்டுப் பகுதிகளுக்கு மத்தியில் உறங்குவது, 8 வயது சிறுவனுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்று விவரித்தார். மட்டுசடோனா பூங்காவில் சுமார் 40 சிங்கங்கள் உள்ளன.

     

    துணிச்சலான பூங்கா ரேஞ்சர்களுக்கும், நியாமினியாமி சமூகத்தை சேர்ந்தவர்களும், ஒவ்வொரு நாளும் சிறுவன் கேட்கும்படி டிரம்ஸ் அடித்து தேடி கடைசியில் கண்டுபிடிக்க உதவியுள்ளார்கள் என்று நன்றி தெரிவித்த எம்.பி., டினோடெண்டாவைக் கவனித்து, அவரைப் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்கு ரேஞ்சர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்தார்.

    • இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
    • மர்ம காய்ச்சல் தொடர்பாக மக்கள் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

    ஆப்பிரிக்காவில் மர்மக் காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பால் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அறியப்படாத நோய் காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நோய் கடந்த நவம்பர் 10 முதல் காங்கோவில் இதுவரை 300 பேரை பாதித்துள்ளது. இந்த மர்ம நோய் காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசப் பிரச்சினை மற்றும் இரத்த சோகை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடையாளம் காணப்படாத காய்ச்சல் போன்ற நோய் தென்மேற்கு காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. நோயின் தன்மை குறித்து கண்டறிய குவாங்கோ மாகாணத்திற்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், மர்ம காய்ச்சல் தொடர்பாக மக்கள் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

    சோப்பு போட்டு கைகளை கழுவவும், மக்கள் கூடுவதை தவிர்க்கவும், தகுதியான சுகாதார பணியாளர்கள் இல்லாமல் இறந்தவர்களின் உடல்களை தொடுவதை தவிர்க்கவும் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்கா பிராந்திய அதிகாரி பிபிசியிடம், "ஆய்வக விசாரணைகளுக்காக மாதிரிகளை சேகரிக்க தொலைதூர பகுதிக்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளோம்" என்று கூறினார்.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று சிவில் சமூகத் தலைவர் சிம்போரியன் மன்சான்சா கூறினார்.

    • மார்கரெட் சோலா என்ற அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் ‘மேக்கப்’ கலைஞராக உள்ளார்.
    • புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

    வயது என்பது வெறும் நம்பர்தான் என்பார்கள். இதற்கு ஏற்றாற்போல ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் பேஷன் அழகியாக மாறி உள்ளார். மார்கரெட் சோலா என்ற அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் 'மேக்கப்' கலைஞராக உள்ளார்.

    அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த நாடான ஜாம்பியாவுக்கு வந்திருந்து தனது பாட்டியை சந்தித்தார். அப்போது பாட்டிக்கு நவநாகரீக உடைகள் அணிவித்தும், விக் அணிவித்தும் விதவிதமாக புகைப்படம் எடுத்தார்.

    இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அவருக்கு பிரபல ஹாலிவுட் இணைய தொடரிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.



    • சிறை வன்முறை சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் சிறைகளுக்குள் புகுந்தவர்கள் பெண் கைதிளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
    • பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர், தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசின் மகாலா நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. ஆண் கைதிகள் மட்டுமின்றி பெண் கைதிகளும் இந்த சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 3 ஆயிரம் பேர் அடைக்க வசதி உள்ள அந்த சிறையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    அளவுக்கு அதிகமானோர் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அங்கே உள்ள கைதிகள் இடையே மோதல் போக்கு, பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறையில் வன்முறை ஏற்பட்டு கைதிகள் தப்பியோட முயன்றனர். இதனால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 129 பேர் உயிரிழந்தனர். சிறை உடைப்பு முயற்சி குறித்து போலீசார் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சிறை வன்முறையின்போது பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் ஆண் கைதிகள் அத்துமீறி நுழைந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான பெண் கைதிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

    சிறை வன்முறை சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் சிறைகளுக்குள் புகுந்தவர்கள் பெண் கைதிளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 348 பெண்களில் 268 பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். அதில் 17 பேர் 18-க்கு வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் ஆவர்.

    பாதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவர், தன்னை ஒரே சமயத்தில் 12 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்தான அதிர்ச்சி்கரமான அறிக்கையை ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ளது.

    காங்கோவில் சிறை வன்முறையின்போது 260 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • புறப்பட்ட சிறிதுநேரத்தில் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.
    • முதல்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் சுமார் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பாங்குய்:

    மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு பாய்கிறது. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டுமெனில் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல முடியும்.

    இதற்காக அவர்கள் படகு போக்குவரத்தையே பெரிதும் நம்பி உள்ளனர். எனவே அந்த ஆற்றில் ஏராளமான படகுகள் சவாரி செய்கின்றன. ஆனால் அவ்வாறு செல்லும்போது அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

    இந்தநிலையில் பாங்குய் நகரில் உள்ள ஒரு உள்ளூர் தலைவர் இறந்து போனார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாங்குய் நகரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் படகில் புறப்பட்டனர்.

    புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் அந்த படகில் இருந்த குழந்தைகள், பெண்கள் என பலர் ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.

    இதனையறிந்த உள்ளூர் மீனவர்கள் உடனடியாக தங்களது மீன்பிடி படகு மூலம் மீட்க முயன்றனர். இதற்கிடையே மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு சென்றனர்.

    எனினும் இந்த சம்பவத்தில் 58 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் சுமார் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாரம் தாங்காமல் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றபோது படகு கவிழ்ந்து 58 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், மற்றொரு ரஷிய வீரரான காரென் கச்சனோவுடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 3-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.

    கச்சனோவ் காலிறுதிக்கு முன்னேறினார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்தது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பெரெட்டினி சாம்பியன் பட்டம் வென்றார்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார்.

    இதில் பெரெட்டினி 7-5, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பெரெட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அர்ஜெண்டினா வீரர் மரியானோவுடன் மோதினார்.

    இதில் பெரெட்டினி 6-7 (4-7) என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட பெரெட்டினி அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோற்றனர்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர், அலெக்சாண்டர் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 5-7 என முதல் செட்டை இழந்தது. 2-வது செட்டை 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-10 என போராடி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரபேல் மேட்டீஸ், கொலம்பியாவின் நிகோலஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-6 (7-5) என முதல் செட்டை கைப்பற்றியது. 2-வது செட்டை 6-7 (1-7) என இழந்தது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடி 10-7 என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    ×