என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
மத்திய ஆப்பிரிக்கா கேமரூனில் லாரி மீது பேருந்து மோதி விபத்து- 19 பேர் உயிரிழப்பு
- பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்.
மத்திய ஆப்பிரிக்கா கேமரூனில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே டூடவாலா- எடியா சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
கேமரூனில் தெற்கு நகரமான எசேகா நோக்கி பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மணல் ஏற்றிச் செல்லும் கனரக லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் அதிகளவில் சாலை விபத்துகள் நடப்பதாகவும், ஆண்டுக்கு சுமார் 1,500 பேர் விபத்துகளில் இறக்கிறார்கள் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.