என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
வங்காளதேசத்தில் ஜெயிலுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்: நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பி ஓட்டம்
- போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
- போராட்டத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள். வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள ஜெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனை பயன்படுத்தி ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர்.
டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்ட்டத்தில் மேலும் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை நடந்த போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர்.
தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டவர எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் வசிக்கும் இந்தியர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்