search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    3 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற சீன ராக்கெட் தோல்வி
    X

    3 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற சீன ராக்கெட் தோல்வி

    • முதல் மூன்று நிலைகளை சாதாரணமாக கடந்த சென்றது.
    • 4-வது நிலையில் குறித்த இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

    சீனாவின் ஐஸ்பேஸ் (iSpace) என்ற தனியார் நிறுவனம் ஹைபர்போலா-1 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 24 மீட்டர் நீளம் கொண்டது. உயர் திட எரிபொருள் மூலம் இயங்கக் கூடியது. இந்த ராக்கெட் இன்று உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு செயற்கைக்கோள் மற்றும் நிலநடுக்கம் முன்னறிவிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

    முதல் மூன்று நிலைகளை வெற்றிகரமாக ராக்கெட் கடந்தது. ஆனால் நான்காவது கட்டத்தில் இலக்கு நோக்கி செல்லவில்லை. பின்னர் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியடைந்ததாக ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததால் மூன்று செயற்கைக்கோள்களும் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட முடியாமல் போனதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக ஐஸ்பேஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய தனியார் நிறுவுனம் என்ற பெருமையை பெற்றது. அதன்பின் தொடர்ந்து மூன்று முறை ராக்கெட் செலுத்திய முயற்சியில் தோல்வியை சந்தித்தது.

    Next Story
    ×