என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 13 பேர் பலி
Byமாலை மலர்25 Aug 2024 8:27 PM IST
- இந்தோனேசியா வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.
- மாயமான பலரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. லட்சக்கணக்கானோர் மலைப் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.
இதற்கிடையே, இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்தன.
இந்நிலையில், இந்தோனேசியா கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என்றும், மாயமான பலரை மீட்புக் குழு தேடி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×