search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    டாடா மோட்டார்ஸ் வருமானத்தை விட அதிக சம்பளம் வாங்கும் எலான் மஸ்க்
    X

    டாடா மோட்டார்ஸ் வருமானத்தை விட அதிக சம்பளம் வாங்கும் எலான் மஸ்க்

    • டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தியில் எலான் மஸ்க் முக்கிய பங்காற்றியுள்ளார்.
    • இதற்காக அவர் அதிக சம்பளத்தை எதிர்பார்ப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

    நியூயார்க்:

    உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வும், எக்ஸ் தள உரிமையாளருமான இவரது தொலைநோக்கு பார்வை தொழில்நுட்ப துறையில் மாற்றங்களை விதைக்கிறது. ஏஐ, ரோபோடிக்ஸ், சிப் மேக்கிங் போன்றவற்றில் பல்வேறு ஆய்வுகளை செய்துவருகிறார்.

    எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனத்தின் முன்னேற்றத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். இதற்காக அவர் அதிக சம்பளத்தை எதிர்பார்ப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். டெஸ்லா நிறுவன பங்குதாரர்களும் இதற்கு உடன்படவில்லை. இதுதொடர்பான வழக்கு டெலோவேர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், டெஸ்லா பங்குதாரர்களின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் எலான் மஸ்கிற்கு 56 பில்லியன் டாலர் சம்பளம் அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மஸ்க் ஆனந்தத்தில் திளைத்துள்ளார்.

    இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாயை விட இவரது சம்பளம் அதிகம். 2023-24-ம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸின் வருவாய் 52.44 பில்லியன் டாலர் ஆகும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை விட அதிக சம்பளம் பெறுவதால் எலான் மஸ்க் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

    Next Story
    ×