என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
லெபனானில் அதி தீவிர போர்.. பேரழிவை உண்டாக்கும் இஸ்ரேலின் புதிய சட்டங்கள் - எச்சரிக்கும் ஐ.நா. தலைவர்
- ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லாவினரை நஸ்ரல்லாவோடு சேர்த்து கொன்றிருக்கிறோம் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்
- இஸ்ரேல் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவை தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது
ஹிஸ்புல்லா கொலை
ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவ்வமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட பின்னர் தற்போது அடுத்த தலைவராக ஆக இருந்த வரையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான ஹிஸ்புல்லாவினரை நஸ்ரல்லாவோடு சேர்த்து கொன்றிருக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார் . இதற்கிடையே கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஒரே இரவில் சரமாரியாக ஏவியது மத்திய கிழக்கு முழுமைக்கும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்டோனியோ குட்ரஸ்
இந்நிலையில் லெபனானில் முழு தீவிரமான போர் உருவாக உள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் வைத்து நேற்றைய தினம் பேசிய அவர், மத்திய கிழக்கு சூழல் எந்நேரமும் வெடிக்காதிருக்கும் வெடிபொருள் நிரம்பிய பீப்பாய்யை தாற்காலிகமாக தடுத்து வைத்திருப்பது போன்றது, இந்த பிரச்சனை இவ்வாறு பெரிதாகப் பரவும் என்று பல மாதங்களாக நான் எச்சரித்தேன்.
தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு முனையில்[பாலஸ்தீனம்] விஷயங்கள் கொதித்துக்கொண்டிருக்கிறது. லெபனான் மீதான தாக்குதல் மொத்த பகுதிகளையும் அச்சுறுத்தலில் தள்ளியுள்ளது. கடந்த சில நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே புளூ லைனில் [லெபனான் - இஸ்ரேல் எல்லை] சண்டை நடந்துள்ளது.
இது ஐநா பாதுகாப்பு அமைப்பின் உடன்படிக்கைகள் 1701 மற்றும் 1559 ஐ மீறிய செயலாகும். தலைநகர் பெய்ரூட் உட்பட லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 1500 பேர் வரை பலியாகியுள்ளனர். லெபனான் தரவுகளின்படி 10 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதில் 3 லட்சம் பேர் சிரியாவுக்குகள் சென்றுள்ளனர்.
ஏற்கனவே கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் முழு தீவிரமான போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை நிறுத்துவதற்கான நேரமும் உள்ளது. எல்லா நாடுகளினது இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொடுங்கனவாக மாறியுள்ள அட்டூழியங்கள் இரண்டாம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஐநாவின் நிவாரண உதவிகள் வழங்கும் [UNRWA] வை தடுக்க இஸ்ரேல் கொண்டுவர திட்டமிட்டிருக்கும் புதிய சட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால் இஸ்ரேல் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவைதங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது. ஐநாவின் நிவாரண உதவிகளை தடுத்து நிறுத்தும் புதிய இரண்டு மசோதாக்கள் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை
இதற்கிடையே இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது கிர்யாத்[Kiryat], ஷமோனா [Shmona], மெடுலா[Metula] உள்ளிட்ட பகுதிகளுடன் சேர்ந்து வடக்கு இஸ்ரேலில் துறைமுக நகரமாகி ஹைபா மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வடக்கு இஸ்ரேல் மீது ஹிபுல்லா 85 ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்